பயம்

   கண்ணீர் விட
   மனமில்லை 
   கரைந்து விடுவாயோ 
   என்று..,

   சுவாசிக்க 
   மனமில்லை 
   உனக்கு குளிருமோ 
   என்று...,

   இறக்க கூட
   மனமில்லை உன்னை 
   பிரிந்து விடுவேனோ 
   என்று......

2ஜிதேவதை

   நடுநிலை வகுடெடுத்த
   காரிருள் கூந்தல்..!
   பவள பாறயாய் நெற்றி்..!
   காதலால் வீழ்த்த துடிக்கும்
   புருவங்கள்
   இருதுருவங்களாய்..!
   தாமர இலையில்
   நீரைபோல கண்மணிகள்..!
   மாணிக்க கல்லில்லாத
   மூக்குத்தி..!
   குயில் தின்னாத உதடு..!
   மார்பு கூட்டினிலே
   எனக்கான வீடு..!
   ஏஞ்சலினாவே ஏங்க வைக்கும்
   அழகிவள்..!
   என் மனதை கொள்ளயடித்த
   2ஜி தேவதை நீ...!

2010

   என்னவளின் 
   செந்தமிழ் கேட்ட
   "முதல் வருடம்"
   நட்பில் கலந்து
   காதலாய் மாறிய
   "முதல் வருடம்"
   என் தேவதையின்
   முகம் கண்ட
   "முதல் வருடம்"
   உயிரில் உருகி
   உறவாகிய
   முதல் வருடத்தை
   பிரிய சற்றே
   கலக்கமே.........!

நினைவுகள்

   கலியுக பெண்ணே
   காதலால் ஆனேன் 
   உன் காதலனாய் 
   காரிருள் சூழ 
   கருமேகங்கள்
   பறைசாற்றுகின்றன
   நம் காதலை 
   உன் முகம் பாராமல்
   நனைகிறேன் 
   நீரால் அல்ல 
   உன் நினைவுகளால்........!

பதற்றம்

   நண்பர்களின்
   செல்போன்கள்
   ரிங்டோன்களால்
   சினுங்குபோல் கூட
   சற்றே என் மனம் 
   பதருகிறது
   எனக்கான உன் 
   அழைப்போ என்று......!