அம்மா

பலமுறை 
சென்றிருக்கிறேன்
தொலைதூரம்
அப்பொழுது
சொல்லியிருக்கிறேன்
தயக்கமில்லாமல்...


கடைசிபயணம்
வெகுதூரம்என்பதால்
சற்றுகலங்கிடவே
செய்தேன்
ஒருநாழிகை
கழிந்திருந்தால்
உன்னுள்
உறங்கியிருக்கும்
கண்ணீர்துளிகள்
உயி்ர்பெற்றிருக்கும்...


உன்னை
கலங்கவைக்க
மனமில்லாமல்
தயங்கியேசென்றேன்.....


அப்பொழுது
தெரியவில்லை
அதுஉனக்கு
கடைசிபயணம்என்று
தெரிந்திருந்தால்
அப்பொழுதே கதறி
அழுதிருப்பேன் 
உன் பாசத்திற்காக...