2010

   என்னவளின் 
   செந்தமிழ் கேட்ட
   "முதல் வருடம்"
   நட்பில் கலந்து
   காதலாய் மாறிய
   "முதல் வருடம்"
   என் தேவதையின்
   முகம் கண்ட
   "முதல் வருடம்"
   உயிரில் உருகி
   உறவாகிய
   முதல் வருடத்தை
   பிரிய சற்றே
   கலக்கமே.........!

நினைவுகள்

   கலியுக பெண்ணே
   காதலால் ஆனேன் 
   உன் காதலனாய் 
   காரிருள் சூழ 
   கருமேகங்கள்
   பறைசாற்றுகின்றன
   நம் காதலை 
   உன் முகம் பாராமல்
   நனைகிறேன் 
   நீரால் அல்ல 
   உன் நினைவுகளால்........!

பதற்றம்

   நண்பர்களின்
   செல்போன்கள்
   ரிங்டோன்களால்
   சினுங்குபோல் கூட
   சற்றே என் மனம் 
   பதருகிறது
   எனக்கான உன் 
   அழைப்போ என்று......!