இருள்

இருட்டு நரகத்தில்
குருட்டு குழந்தையாய் நான்
ஆரேழுநாட்களில்
பிரசவிக்கபோகிறாள்
என்னை..,
வேண்டாமென்று
பலமுறை எட்டி
உதைக்கிறேன்
தாக்கியும்
பார்க்கிறேன்
பெற்றேதான்
தீருவேன் என
பிடிவாதமாய்
பிரசவித்தாள்..,
அம்மா என்றழைத்த எனக்கு
அப்போது தெரியவில்லை
அவளும் குருடியென்று....